தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகம் - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்யும் வழக்கமான 440.30 மி.மீ மழையை காட்டிலும் இந்த முறை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 440.30 மி.மீட்டர் மழை பதிவாவது வழக்கம். இந்த முறை வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் மழை கிடைத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது. வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை திங்கட்கிழமை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story