வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தல்

நீலகிரி

ஊட்டி

ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்கள் விழிப்புணர்வு குழு, சுய உதவிக்குழுக்கள் மூலம் பள்ளிக் கல்லூரிகளில் சுவரிதழ் மற்றும் கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி மாவட்ட அளவிலான குழு மூலமாக வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். முதல்வரின் முகவரி திட்டம் மலைவாழ் மற்றும் பழங்குடியினரிடமிருந்து சிறப்பு இலக்குப்படை திட்டத்தின் கீழ் நிலுவை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை செயலாளர் தெரிவித்தது போல் கழிப்பறை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அனைத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story