தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை
x

கல்லணையில் தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

கல்லணையில் வெண்ணாறு பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளில் பணியாற்ற மேற்கு வங்காளம் மாநில சோடர்பூர் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வெண்ணாறு பகுதியில் உள்ள தற்காலிக குடியிருப்பில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மேற்குவங்காளத்தை சேர்ந்த ஜாரோபருய் (வயது39) என்பவர் வீட்டில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள், ஜாரோபருய் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து, இதுகுறித்து தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜாரோபருய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story