பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்


பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்
x

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு கெஜல்நாயக்கன்பட்டி, கந்திலி, அச்சமங்கலம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி அந்தந்த ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கு.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக்குமார் கலந்துகொண்டு தி.மு.க. கொடி ஏற்றி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் இனிப்புகளை வழங்கினார். மேலும் புதிய உறுப்பினர்களுக்கு கட்சி வேட்டி வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பி.துரைசாமி, மாணிக்கம் காந்தி, கிளைச் செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், நாகராஜ், சென்னப்பன், அன்பு, ராஜேந்திரன், லட்சுமணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story