மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
ஆம்பூரில் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் 28,29 வார்டுகளில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளைெயாட்டி தி.மு.க. சார்பில் அவரின் உருவ படத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரான ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ., பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய கழக செயலாளரான வில்வநாதன் எம்.எல்.ஏ., ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளரான நகர மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுப்புத்தகம், உணவு பொட்டலங்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story