பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை - சென்னையில் டீசல் தட்டுப்பாடு?


பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை - சென்னையில் டீசல் தட்டுப்பாடு?
x
தினத்தந்தி 5 Sept 2022 8:56 AM IST (Updated: 5 Sept 2022 10:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் 107-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலம் என்று கூறப்படுகின்றது.


Next Story