நாகர்கோவிலில் சாலையை ஆக்கிரமித்த 90 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் மேயர் மகேஷ் தகவல்


நாகர்கோவிலில்  சாலையை ஆக்கிரமித்த 90 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் மேயர் மகேஷ் தகவல்
x

நாகர்கோவிலில் சாலையை ஆக்கிரமித்த 90 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று மேயர் மகேஷ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் சாலையை ஆக்கிரமித்த 90 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று மேயர் மகேஷ் கூறினார்.

நோட்டீஸ்

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதி மற்றும் சற்குணவீதி பகுதிகளில் சாலை மற்றும் தெருக்களை பல்வேறு கடைக்காரர்கள் ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், பழைய இரும்பு பொருட்கள் ஆகியவற்றை வைத்திருப்பதாகவும், இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து மாநகராட்சிக்கு அதிக அளவில் புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செட்டிகுளம் சந்திப்பு பகுதி மற்றும் சற்குணவீதி தெருவில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களையும், பழைய இரும்பு பொருட்களையும் அங்கிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் அகற்றி போக்குவரத்து சுமூகமாக நடைபெற உதவ வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாதபட்சத்தில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பு செய்திருந்த 90 கடைக்காரர்களுக்கு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என மேயர் மகேஷ் கூறினார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி நல அதிகாரி ஜான், துணைமேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story