நெல்லை - சென்னை சிறப்பு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் என அறிவிப்பு
நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
நெல்லையிலிருந்து சென்னைக்கு விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரெயிலானது நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ரெயில் இன்று 2.45 மணி நேரம் தாமதாக 9.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இணை ரெயில் தாமதமாக வரும் காரணத்தினால் நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் இன்று தாமதமாக புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story