நாவல் பழங்கள் விற்பனை மந்தம்


நாவல் பழங்கள் விற்பனை மந்தம்
x

கோத்தகிரியில் தொடர் மழை காரணமாக நாவல் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் தொடர் மழை காரணமாக நாவல் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது.

விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்கள் நாவல் பழ சீசன் காலமாக உள்ளது. தற்போது சீசன் காரணமாக நாவல் மரங்களில் பழங்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. நீலகிரியில் விளையும் நாவல் பழங்கள் சிறியதாக இருந்தாலும், அதிக இனிப்பு சுவை கொண்டது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற சத்துகள் உள்ளன.

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். மேலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இருப்பினும், கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால், நாவல் பழங்களை வாங்க ஆர்வம் காட்டததால் விற்பனை வெகுவாக குறைந்து உள்ளது.

விற்பனை மந்தம்

இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது:- நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட நாவல் பழங்களை அனைவரும் வாங்கி செல்வார்கள். ஒரு கிலோ நாவல் பழம் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வனப்பகுதிகள், சாலையோரங்களில் நாவல் மரங்களில் உள்ள பழங்களை பழங்களை பறித்து விற்பனைக்காக கொண்டு வருகிறோம்.

தொடர் மழையால் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்தும், விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் நாங்கள் கவலையடைந்து உள்ளோம். வருகிற நாட்களில் நாவல் பழ விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story