விலைவாசி உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
சாத்தூரில் விலைவாசி உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்,
சாத்தூரில் விலைவாசி உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்
சாத்தூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர்குழு செயலாளர் பெத்துராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமுருகன், லட்சுமி, ஒன்றிய குழு செயலாளர் சரோஜா, கிருஷ்ணமூர்த்தி, நகர்குழு செயலாளர் சீனிவாசன், நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை
அதேபோல அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார்.
இதில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மற்றும் மாவட்ட செயற்குழு குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராமர், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.