தலையில் மண் சட்டியை கவிழ்த்து நூதன போராட்டம்


தலையில் மண் சட்டியை கவிழ்த்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பாரனூர் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தலையில் மண் சட்டியை கவிழ்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பாரனூர் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தலையில் மண் சட்டியை கவிழ்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நூதன போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பாரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி சந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தங்கள் தலையில் மண் சட்டியை கவிழ்த்து வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டு மனை வழங்கக்கோரி

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முதல் மேற்கண்ட பாரனூர் கிராமத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு கொடுத்தோம். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு புறம்போக்கு நிலம் இருந்தும் பட்டா வழங்க மனம் இல்லாததால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் தங்களை புறக்கணிக்கும் அதிகாரிகளின் முகத்தை பார்க்க மனமில்லாமல் தலையில் மண்சட்டியை கவிழ்த்தி போராட்டம் நடத்தி மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.

பாரனூர் கிராமத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story