கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
கள்ளழகர் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
மதுரை
அழகர்கோவில்,
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த ரூ.56 லட்சத்து 10 ஆயிரத்து 139-ம், தங்கம் 101 கிராம், வெள்ளி 390 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும், இருந்தது.
உண்டியல் எண்ணும் போது, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர் சேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story