முத்துமாரியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணிக்கை
முத்துமாரியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்டது.
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தருவது உண்டு. கோவிலில் பிரசித்தி பெற்ற மாசி திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற உள்ளது. கோவிலில் பூச்சொரிதல் விழா வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் உதவி ஆணையர் அனிதா தலைமையில் தன்னார்வலர்கள் மூலம் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் உள்ளிட்டவை எண்ணப்பட்டன.
மொத்தம் 4 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.9 லட்சத்து ஆயிரத்து 339-ம், தங்கம் 134 கிராமும், வெள்ளி 480 கிராமும் இருந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 27-ந் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. தற்போது கோவிலில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதில் உண்டியல்களில் காணிக்கை அதிகம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டுள்ளதாக கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர்.