நுங்கால் பறிபோன உயிர்: கோவில் திருவிழாவுக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
பாவூர்சத்திரம் அருகே நுங்கு பறிப்பதற்காக இளைஞர் ஒருவர் பனை மரத்தில் ஏறியுள்ளார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே நுங்கு பறிப்பதற்காக பனை மரம் ஏறிய இளைஞர், கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாவூர்சத்திரம் அருகே நாகல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கோவில் திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
அப்போது, கோவில் அருகேயுள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக விஜயகுமார் பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்து விஜயகுமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விஜயகுமார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story