விஷம் குடித்து நர்சு தற்கொலை


விஷம் குடித்து நர்சு தற்கொலை
x

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து நர்சு தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள மூங்கில்பட்டு காலனியை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகள் திவ்யபாரதி(வயது 19). நர்சான இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை பெற்றோர் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை திவ்யபாரதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் ஷகிலா கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி சப்–-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்குப்பதிவு செய்து திவ்யபாரதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story