விஷம் குடித்து நர்சு தற்கொலை


விஷம் குடித்து நர்சு தற்கொலை
x

கச்சிராயப்பாளையம் அருகே விஷம் குடித்து நர்சு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே குதிரைசந்தல் கிராமத்தை சோந்தவர் பாலமுருகன். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் தமிழரசி (வயது 19) தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தமிழரசி வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் செல்வி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த தமிழரசி விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story