நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரத்தில் செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நர்சிங் மாணவி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருடைய மனைவி சந்தனமாரி. இவர் அங்கன்வாடியில் பணியாளராக உள்ளார். இவர்களுடைய மகள் கனிகா (வயது 20). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கனிகா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததாகவும், இதனை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனமுடைந்த கனிகா நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கனிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரிதாபம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய் கண்டித்ததால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உளள்து.