நர்சிங் மாணவி மாயம்; போலீசார் விசாரணை


நர்சிங் மாணவி மாயம்; போலீசார் விசாரணை
x

நர்சிங் மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணத்திரியான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் இளமதி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற பிரியதர்ஷினி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில் மாயமான நர்சிங் மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story