கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
வேலூர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமார பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி சாரதி வரவேற்றுப் பேசினார்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து கொண்டு, மருந்து, மாத்திரை வாங்கிச்சென்றனர். 20-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை நந்தகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story