ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்


ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்
x

ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகமும், சோழமாதேவியில் உள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையமும் இணைந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாமை ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடத்தியது. மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா வரவேற்றார். முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் வேளாண் அறிவியல் மைய செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா பழக்கன்று நடவு செய்து, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசினார். மேலும் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கி, முகாமில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். மையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் பற்றியும், உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் உயிர் செறிவூட்டப்பட்ட பயிர் ரகங்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினர். இம்முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு காய்கறி விதை மற்றும் பழக்கன்று வழங்கப்பட்டது.


Next Story