ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
விருதுநகர்
விருதுநகர் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக வட்டார அளவில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் எனும் தலைப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சி வைக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹேமலதா தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார், ஊராட்சி மன்ற தலைவர் மருதுராஜ் முன்னிலை வகித்தார். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது. முன்னதாக விருதுநகர் வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்ட ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Related Tags :
Next Story