ஊட்டச்சத்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
ஊட்டச்சத்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. துணை மேயர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இருசக்கர வாகன பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.
பேரணி திருப்பூர் குமரன் சிலை வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக ஊட்டச்சத்து விழா விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துணை மேயர் தொடங்கிவைத்தார். பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் ஊட்டசத்து உறுதிமொழி ஏற்றனர்.
இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் மரகதம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா, ஒருங்கிணைப்பாளர்கள் சிவரஞ்சனி, ஜனரஞ்சினி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.