பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம்
பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம்
திருப்பூர்
வெள்ளகோவில்
வெள்ளகோவில் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையத்தில் தற்போது 20 குழந்தைகள் உள்ளனர். 1 அங்கன்வாடி பணியாளர், 1உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் அமரும் பகுதிகள் மேல்கூரை சேதமாகி மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே புகுந்து விடுகின்றன. சமையல் செய்யும் பகுதியில் கான்கிரீட் மேல் கூரை சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story