ஊட்டச்சத்து மாத விழா
பொட்டல்புதூரில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது
தென்காசி
கடையம்:
கடையம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக ஊட்டச்சத்து மாத விழா பொட்டல்புதூரில் கொண்டாடப்பட்டது. பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் கோமதி, முகமது அபூபக்கர் சித்திக், தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வட்டார திட்ட உதவியாளர் முருகேஸ்வரி ஊட்டச்சத்து பற்றிய அவசியத்தை எடுத்துக் கூறினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமூர்த்தி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
-
Related Tags :
Next Story