ஊட்டச்சத்து மாத விழா


ஊட்டச்சத்து மாத விழா
x

புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரியில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைப்பு குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.இதில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, தமிழ்த்துறை தலைவர் சசிகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story