காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள்


காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள்
x

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

திருச்சி

திருச்சி நவல்பட்டு பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஹை எனர்ஜி புராஜெக்டைல் பேக்டரி (எச்.இ.பி.எப்.) அரசு நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் அங்கம் ஆகும். இந்த எச்.இ.பி.எப். தொழிற்சாலை சார்பில் ஒருங்கிணைந்த சமூக பொறுப்பு திட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எச்.இ.பி.எப். பொது மேலாளர் ஞானேஸ்வர்தியாகி தலைமை தாங்கி, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினார். கூடுதல் பொது மேலாளர் ஷண்.மூர்த்தி, திருச்சி மாவட்ட துணை இயக்குனர் (காச நோய்) டாக்டர் சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 20 பேருக்கு 2-வது முறையாக ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக எச்.இ.பி.எப். நிர்வாக அதிகாரி ரமேஷ்வரன் வரவேற்று பேசினார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார். இதில் எச்.இ.பி.எப். அதிகாரிகள், ஊழியர்கள், நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story