மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனை


மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனை
x

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்

சென்னை,

அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதையொட்டி நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் ஒலித்தது. தொடர்ந்து அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் .இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் .

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார் .தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு சென்னைக்கு வர அழைப்பு விடுத்துள்ளார் .சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்த்திர விடுதியில் காலை 10 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது


Next Story