ஓ.பன்னீர் செல்வம் விஸ்வரூபம் எடுத்து விரைவில் சுற்றுப் பயணம் - கோவை செல்வராஜ்
கட்சியை மீட்டெடுக்க ஓ.பன்னீர் செல்வம் அதிரடி முடிவு எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறினார்.
சென்னை
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டன.அவர் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டது.
இதைதொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் நேற்று முந்தினம் டெல்லி சென்றார். அங்கு பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய நிலையை விளக்கி இருக்கிறார். இன்று மாலை அவர் டெல்லியில் இருந்து திரும்புகிறார்.
தனக்கு ஆதரவு திரட்ட ஓ.பன்னீர் செலவ்ம் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த பயணம் தொடங்கும் என்கிறார்கள்.அடுத்த பொதுக்குழுவிற்கு முன்பாக தென் மாவட்டங்களில் நிலைமையை மாற்ற ஓ,பன்னீர் செல்வம் முயலுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வம் பக்கம்தான் உள்ளார்கள். தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் விஸ்வரூபம் எடுத்து விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.11ம் தேதி பொதுக்குழு என்பது இனி கனவில்தான் நடக்கும். அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சி செய்கிறது. அதிமுகவை கமெப்னிபோல் நடத்தி அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கின்றனர் என கூறினார்.