ஓ.பன்னீர்செல்வம் தவறான பாதையில் செல்கிறார்- ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னை.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒற்றை தலைமையை ஈபிஎஸ் ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம் .ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறிழைத்து கொண்டிருக்கிறார். தவறான பாதையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார்அதிமுக ஜனநாயகம் மலர்ந்த அமைப்பு .இங்கு அராஜகத்திற்கு இடமில்லை.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பொதுக்குழுவில் பங்கேற்பார் என நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story