ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேனர் அகற்றம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணி மீது புகார்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேனர் அகற்றம்  எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணி மீது புகார்
x

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேனர் அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேனர் அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு அணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் வடக்கு மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அ.தி.மு.க.செயலாளர் சுரேஷ் பாபு வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி வாணியம்பாடி நகரத்தைச் சார்ந்தவர்கள் தனியார் அனுமதி பெற்று பேனர் வைத்துள்ளனர். அதனை எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள் அகற்றி விட்டுள்ளனர். தற்போது எந்த அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களை வைத்துள்ளனர்.

அவற்றை உடனடியாக அகற்றுவதோடு எங்கள் பேனர்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story