ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன்.26-

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையம் அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் கோசலைச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறுநாகுடி அரிகிருஷ்ணன், வடக்கலூர் கண்ணன், உப்பூர் காளைராஜன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சண்முகம் மற்றும் முனுசாமி ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மணிகண்டன், சேத்திடல் சாத்தையா, சாத்தனூர் சுமன், ஆனந்தூர் சக்தி, சேதுபதி ராஜா, கருணாநிதி, பிரதீபன், ஆர்.எஸ்.மங்கலம் முத்துராமலிங்கம், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story