ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை செய்யக்கோரி மனு


ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை செய்யக்கோரி மனு
x

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் திருவிகா கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரித்து கட்சி அமைப்பு ரீதியாக முறையாக மக்கள் பணிக்காக செயல்பட்டு வருகின்றது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி எங்கள் கட்சியின் கோட்பாட்டுக்கும், குறிக்கோளுக்கும் விரோதமாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கியதை இந்திய தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.வருகிற 1-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கரூர் நகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அ.தி.மு.க.வின் பெயரையோ, கொடியையோ மற்றும் சின்னத்தையோ பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எவ்வித சட்டப்படியான மற்றும் தார்மீக உரிமையும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தபோவதாக எங்கள் கட்சியினருக்கு தெரியவருகிறது. அவ்வாறு பயன்படுத்தினால், எங்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அச்சமும், சந்தேகமும் மன உளைச்சலும் ஏற்படும்.

இந்த நிகழ்ச்சி மற்றும் எதிர்காலத்தில் கரூர் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தினால் அவைகளிலும், அ.தி.மு.க. கட்சி கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என தகுந்த அறிவுறுத்தலை வழங்குமாறும், பயன்படுத்துவதை தடை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை தடுத்து நிறுத்தி, எவ்விதமான அசம்பாவித நிகழ்வுகள் ஏதும் ஏற்படாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story