அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பம்:புகழேந்தி பேட்டி


அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பம்:புகழேந்தி பேட்டி
x

அனைவரும் ஒருஙகிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பம் என்று புகழேந்தி கூறினார்.

தேனி

பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு அவரது ஆதரவாளரான புகழேந்தி நேற்று வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்ேபாது அவர் கூறியதாவது:- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர். அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை.

இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு. இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தான் தொடர்கின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தொடர்ந்தால் அ.தி.மு.க.வில் ஒரு சேர் கூட மிச்சம் இருக்காது. சொத்துகள் அனைத்தையும் கொள்ளையடித்து விடுவார்கள்.

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் என சொல்பவர்கள் யாராவது அவரது காலில் விழாமல் இருந்திருக்கிறார்களா. அவரது காலில் விழுந்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக முடிந்தது. சசிகலாவை பற்றி பேசுவதற்கு அவரது தரப்பினருக்கு தகுதி கிடையாது. இறுதியாக தற்போது கூட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரும் மன்னித்து ஏற்றுக் கொள்வார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story