கோல்வார்பட்டி அணையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்
கோல்வார்பட்டி அணையை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்துதுள்ளன.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம் வெயிலின் தாக்கத்தால் வெகுவாக குறைந்து வருகின்றது. இன்னும் சில வாரங்களிலேயே விரைவாக குறையும் நிலை உள்ளது. இந்தநிலையில் அணையின் இரு கரைப்பகுதிகளிலும் கருவேல மரங்கள் முற்றிலும் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. இந்த மரங்கள் பாதையை மறைத்து வளர்ந்துள்ளன. கோல்வார்பட்டி அணையில் இருந்து ஏ.புதுப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் நிலையில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து தார்ச்சாலை ஒத்தையடி பாதையாக மாறி விட்டது. எனவே அணையின் கரைப்பகுதிகளில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி அணையில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story