பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு
கீழப்பாவூரில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில் பாரதியாரின் 101-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கீழப்பாவூர் அம்மன் கோவில் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மன்றத்தலைவர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். அருள்செல்வன், விவேகானந்தர், மதியழகன், சுரேஷ்முருகன், சந்தணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற துணை செயலாளர் பொன்ராஜகோபால் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன், பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கணேசன், செல்லச்சாமி, சுந்தர்ராஜ், ராமச்சந்திரன், மலையராசு, பெரியசாமி, சவுந்திரராஜன், குத்தாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் ராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story