ஆக்கிரமிப்பினால் திணறும் வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக முத்தாலம்மன் பஜார் உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவமனை, இதர பணிகளுக்காகவும் பஜார் பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆங்காங்ேக நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
மேலும் ஒரு சில கடைகள் சாலைகள் வரை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பஜார் பகுதி முழுவதும் போக்குவரத்து ெநரிசல் நிறைந்து காணப்படுகிறது. வத்திராயிருப்பு முத்தலாம்மன் பஜார் வழியாக கூமாப்பட்டி, கான்சாபுரம், அத்தி கோவில், நெடுங்குளம், பிளவக்கல் பெரியார் அணை, கிழவன் கோவில், சேது நாராயணபுரம் உள்பட எண்ணற்ற கிராம மக்கள் இந்த வழியாக தான் செல்கின்றனர்.
நிரந்தர தீர்வு
தாணிப்பறை அடிவாரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, பேரையூர், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களும் இந்த வழியாக தான் செல்கின்றன.
அவ்வாறு செல்லும் பஸ்கள் பஜார் பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றன.
அதேபோல மதுரை, விருதுநகர், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாமல் முத்தாலம்மன் பஜார் பகுதியில் பயணிகளையும் இறக்கி விட்டு செல்கின்றன. இவ்வாறு பல வகையில் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பஜார் பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வத்திராயிருப்பு பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளர்