தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் குழந்தை மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களா என்பது குறித்து விழுப்புரம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பர்வதம் தலைமையில் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் நூருல்லா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரேமலதா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இக்குழுவினர் விழுப்புரம் அருகே அய்யூர்அகரம், மந்தக்கரை, கோலியனூர் கூட்டுசாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகள், நகை செய்யும் பட்டறைகள் மற்றும் இதர நிறுவனங்களிலும் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் வேலை செய்கிறார்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story