சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி


சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி சமூக நீதி நாளாக கடைபிடித்து, தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும் என்று அறிவித்துஇருந்தார்.

அதன்படி நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பெரியார் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை உறுதிமொழியை வாசிக்க, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகாராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) நந்தகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story