ஒடிசா ரெயில் விபத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு காங்கிரஸ் பயப்படுவது ஏன்? பா.ஜ.க. கேள்வி


ஒடிசா ரெயில் விபத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு காங்கிரஸ்  பயப்படுவது ஏன்? பா.ஜ.க. கேள்வி
x
தினத்தந்தி 5 Jun 2023 4:21 PM IST (Updated: 5 Jun 2023 4:48 PM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என கம்யூனிஸ்டுகள் அலறுவது தான் சந்தேகத்தை வரவழைக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ரெயில் விபத்து ஏற்பட்டால் நீதிபதி குழு விசாரணை தான் அமைக்கவேண்டும் என்றும், ஆனால் மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது என்றும், ரெயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் தவறை மறைக்கவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என கம்யூனிஸ்டுகள் அலறுவது தான் சந்தேகத்தை வரவழைக்கிறது. அதேபோல, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சி.பி.ஐ. என்பது குற்றங்களை கண்டுபிடிக்கத்தான் உள்ளே தவிர, விபத்துக்களை அல்ல என்றும் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

2010-ம் ஆண்டு ஜனனேஸ்வரி ரெயில் விபத்துக்கு சி.பி.ஐ. விசாரணை அளித்தது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் சி.பி.ஐ. விசாரணை செய்தது சரி, பா.ஜ.க. ஆட்சியில் தவறா? இந்த துன்ப சம்பவத்துக்கான காரணத்தையும், காரணமானவர்களையும் நீதிபதியின் முன் நிலை நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ரெயில்வே துறையும், குற்றவியல் ரீதியாக சி.பி.ஐ.யும் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்ப்பவர்கள் எதை கண்டு அச்சப்படுகிறார்கள்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story