சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது


சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில்  கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது
x

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சூரமங்கலம்::

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ெரயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி நேற்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் தன்பாத் -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 13351) போலீசார் சோதனை நடத்தினர். அதாவது காட்பாடி ரெயில் நிலையம் முதல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை சோதனை நடத்தப்பட்டது.

அப்போது எஸ் 1 பெட்டியில் கழிவறை அருகே ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பயணம் செய்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததுடன், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சுமார் 5 கிலோ கஞ்சா இருந்தது. மேலும் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மந்து நாய்க் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்திய அவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story