முன்னோர்களுக்கு திதி வழங்கி கோவில்களில் வழிபாடு


முன்னோர்களுக்கு திதி வழங்கி கோவில்களில் வழிபாடு
x

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து கோவில்களில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு மேற்கொண்டனர்.

நீலகிரி

கூடலூர்

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து கோவில்களில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு மேற்கொண்டனர்.

ஆடி அமாவாசை திதி

ஆடி மாதம் கடக ராசியில் சூரியன் வரும் நாளை பித்ருக்களுக்கான இடமாக கருதப்படுகிறது. இதனால் ஆடி அமாவாசை பித்ருக்கள் எனும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும் என இந்துக்களின் நம்பிக்கை. நேற்று ஆடி அமாவாசையையொட்டி அனைத்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மேல் கூடலூர் சந்தை கடை, பொக்காபுரம் மாரியம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேபோல் கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகாவிஷ்ணு கோவில்களில் ஆற்றின் கரையோரம் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி வழங்கினர். தொடர்ந்து கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர். இதேபோல் கூடலூர்- கேரளா எல்லையில் பிரசித்தி பெற்ற பொன்குழி ராமர்- சீதாதேவி கோவிலில் நேற்று அதிகாலை 2 மணி முதல் ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு திதி வழங்கினர்.

சிறப்பு பூஜைகள்

தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர். முன்னதாக சுல்தான்பத்தேரி - குண்டல் பெட் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களின் வருகையும் அதிகரித்தவாறு இருந்ததால் கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

--


Next Story