வணிகவரி துணை ஆணையர் அலுவலகம்
திருப்பத்தூரில் வணிகவரி துணை ஆணையர் அலுவலகத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை பகுதியில் வணிகவரித்துறை துணை ஆணையர் (மாநிலவரி) அலுவலகத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.
வேலூர், திருவண்ணாமலை வணிகவரி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இன்று (நேற்று) முதல் புதிதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் வணிகவரி அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வரிவிதிப்பு வட்டங்கள் செயல்படும் என கலெக்டர் தெரிவித்தார். அப்போது துணை ஆணையர் ராமோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story