பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்


பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்
x

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறையின் கட்டிடம் மற்றும் பராமரிப்புத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறையின் கட்டிடம் மற்றும் பராமரிப்புத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்

திருவண்ணாமலை வேங்கிக்கால் காஞ்சி சாலையில் பொதுப்பணித்துறையின் கட்டிடம் மற்றும் பராமரிப்பு துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த அலுவலகம் திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை உள்ள வட்ட அளவிலான கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமாகும்.

இந்த அலுவலகம் திறப்பு விழாவிற்கு முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பு பொறியாளர் மோகன சுந்தரம் வரவேற்றார்.

அமைச்சர் திறந்து வைத்தார்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு அலுவலக கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக அவருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கை மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சீ.பார்வதிசீனிவாசன், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன்,

திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, திருவண்ணாமலை செயற்பொறியாளர்கள் கவுதமன், பழனி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட், குடியாத்தம் ஆர்.சுரேஷ்மணி, ஈரோடு ஜி.எம்.எஸ். பில்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகி பாலசிவகுமார், நாமக்கல் ஜி.ஆர்.எம். கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாகி கணேசன், செய்யாறு அரசு ஒப்பந்ததாரர்கள் ப.கதிரவன், ந.குமரவேல், விழுப்புரம் அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார் உள்பட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி பொறியாளர் முகிலன் நன்றி கூறினார்.


Next Story