ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை
ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம், இடும்பவனம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் கழனியாறு, புதிய மற்றும் பழைய கிளைதாங்கியாறு, மரைக்கா கோரையாறு ஆகியவற்றில் ஆகாய தாமரை மண்டி உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வடியாமல், வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், இடும்பாவனத்தில் உள்ள பழைய கிளைதாங்கியாற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆறுகளில் மண்டி உள்ள ஆகாய தாமரைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய துணை செயலாளர் முருகையன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story