ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஆய்வு
ஆனைக்குப்பம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஆய்வு செய்தாா்.
திருவாரூர்
நன்னிலம்;
நன்னிலம்ஊராட்சி ஒன்றியம் ஆணைகுப்பம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் தெய்வநாயகி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆரம்ப சுகாதார வளாகம், பள்ளி கட்டிடம், ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தார் மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்ஆனைக்குப்பம் குளக்கரையில் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தான கிருஷ்ணா, ரமேஷ்வெற்றியழகன், உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி ஒன்றிய பணி மேற்பார்வையாளர், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story