குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு


குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் மீட்புக்காக புதிதாக வீரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மழைக்காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான வாகனங்கள், மீட்பு எந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணாதுரை குன்னூர் தீயணைப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு வீரர்களிடன் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்களை கையாளுவது குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து வாகனங்கள், எந்திரங்கள் இயங்குவது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் உடனிருந்தார்.


Next Story