தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு
தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.
வேலூர்
குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.பழனி தலைமையில் வருடாந்திர ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், குடியாத்தம் தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டாசு கடைகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இயற்கை இடற்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியின் போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள் சரியாக உள்ளதா எனவும், தீத் தடுப்பு கருவிகள் சரியான முறையில் இயங்குகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக குடியாத்தம் தீயணைப்பு வீரர்களின் தீத் தடுப்பு பணிகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது
இந்த ஆய்வின் போது குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் கே.லோகநாதன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story