நெல் கொள்முதல் மையங்களில் அதிகாரி ஆய்வு


நெல் கொள்முதல் மையங்களில் அதிகாரி ஆய்வு
x

நெல் கொள்முதல் மையங்களில் அதிகாரி ஆய்வு

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் மையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் ஆய்வு செய்தார்.

விதைப்பண்ணை

மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் மற்றும் சர்க்கார் கண்ணாடிபுத்தூர் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் மையங்களை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். இதனையடுத்து மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளத்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் நடப்பு சம்பா பருவத்தில் 22 ஏக்கரில் கோ51, விஜிடி1 மற்றும் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி போன்ற ரக நாற்றுக்கள் கொண்டு நடைபெற்று வரும் நடவுப் பணிகளை பார்வையிட்டார்.

மேலும் வேடப்பட்டியில் நடைபெற்ற பிரதம மந்திரியின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டு திட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு வேளாண்மை இணை இயக்குனர் தலைமை தாங்கி நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:-

மக்காச்சோளம்

நடப்பு சம்பா பருவத்தில் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதியும், மக்காச்சோளப் பயிருக்கு 30-ந் தேதியும் கடைசி நாளாகும்.பிரீமியம் தொகை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 600 ஆகவும் மக்காச்சோளப் பயிருக்கு ரூ. 487 ஆகவும் அரசு நிர்ணயம் செய்துள்ளது.

பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். என்று அவர் கூறினார். முன்னதாக மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களைக் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். வேளாண்மை உதவி அலுவலர்கள் ராஜசேகரன், நித்யராஜ் மற்றும் பாலு ஆகியோர் கூட்டம் மற்றும் ஆய்வுத் திடல்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story