தனிநபர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தங்கள் நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற ஆட்சேபமில்லா சான்று வழங்க மறுத்த நீர்வளத்துறை உத்தரவை ரத்து செய்யக்கோரி பாதம் சந்த் ஜெயின், சுனிதா ஜெயின், நீர்ஜ் ஜெயின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணையின்போது ,
வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நீர்நிலைகளை, அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து வரையறை செய்ய வேண்டும். வீட்டு மனைகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு சென்றுவிட்டதால், பேராசைக்காரர்கள் தங்கள் சுயநலனுக்காக நீர்நிலைகளையும் விட்டு வைப்பதில்லை. அரசு நிலங்களை சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலமாக மாற்றி சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு, அதிகாரிகளும் துணை போகின்றனர். இவ்வாறு சென்னை ஐகோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.