போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
x

தஞ்சை கீழவாசல் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை கீழவாசல் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றிரித்திரிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சீனிவாசபுரம், திலகர் திடல், மருத்துவக்கல்லூரி சாலை, கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன.

சாலைகளில் படுத்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறாகவும் செல்கி்ன்றன. சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர்கள் மாடுகள் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பும் போது கீழே தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது.

போக்குவரத்துக்கு இடையூறு

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. மேலும் சாலைகளில் செல்வோரை சில மாடுகள் விரட்டுகின்றன. இதனால் நடந்து செல்வோரும் அச்சத்துடன் காணப்படுகின்றன. எனவே சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து மாநகரட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிரித்திரியும் மாடுகளை பிடித்து, பட்டியில் அடைத்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

15 பேருக்கு அபராதம்

இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர். சுகாதார ஆய்வாளர் ரஞ்சித்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் கீழவாசல், மீன்மார்க்டெ் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 15 மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் விதித்தனர்.

மேலும் தொடர்ந்து இது போல் மாடுகளை சாலைகளில் சுற்றித்திரிய விட்டால், போலீசில் புகார் அளித்து, உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story